வேட்டையன் - துஷாரா விஜயனின் கதாப்பாத்திர அறிமுக வீடியோ வெளியானது| Vettaiyan - Dushara Vijayan's character introduction video released

  மாலை மலர்
வேட்டையன்  துஷாரா விஜயனின் கதாப்பாத்திர அறிமுக வீடியோ வெளியானது| Vettaiyan  Dushara Vijayans character introduction video released

ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது படத்தில் கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வீடியோவை படக்குழு வெளியிட்டு வருகின்றனர். அதில் முதலாக ரித்திகா சிங் கதாப்பாத்திர வீடியோவை வெளியிட்டனர். படத்தில் ரித்திகா சிங் காவல் அதிகாரியாக ரூபா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக நடிகை துஷாரா விஜயன் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். துஷாரா விஜயன் இப்படத்தில் ஒரு ஆசிரியராக சரண்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.அதைத்தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.Brave & Bold! ? Introducing @officialdushara as Saranya in VETTAIYAN ?️ Prepare to witness her grit. ? #Vettaiyan ?️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/KV6ADT5Mwtஉங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை